89 ஆயிரம் பேரிடம் ரூ.4,400 கோடி சுருட்டிய வழக்கு:'ஹிஜாவு' மோசடி நிதி நிறுவன பெண் இயக்குனர் கணவருடன் கைது

 



சென்னை அசோக் நகரில் டிராபிக் ஜாம் ஆகும் வகையில் மக்கள் கூட்டம் ஒரு நிதி நிறுவனத்தை ( ஜிஹாவ் ) முற்றுகையிட போலீஸ் குவிக்கப்பட்டது . ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் காலம் முழுவதும் தரப்படும் என்கிற ஆசை வார்த்தையை கூறி கோடிக்கணக்கில் ஜரூராக பணத்தை வசூல் செய்திருக்கிறது ஹிஜாவ் நிதி நிறுவனம்.

' சார் நாங்க இருபத்தஞ்சி பேர் குரூப்பா தலா ஒரு லட்சம் வீதம் இருபத்தைந்து லட்சம் போட்டோம் . இரண்டு மாசம் தான் எங்களுக்கு பணம் பதினைந்தாயிரம் வந்தது . கம்பெனி ஆரம்பித்து ஏழு மாசத்துல கடந்த நாலு மாசமாவே பிரச்சினைதான். ஆனாலும் புதிதாக வருபவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் . செக் , ஆன்லைன் மூலமாக இல்லாமல்

ரெடி கேஷாக மட்டுமே பணத்தை வாங்கினார்கள். பணம் கொடுத்தற்கான ஆதாரங்கள் கூட யாரிடமும் இல்லை ' என்கிறார் ஒரு பெண்மணி .

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இரண்டு தோழிகள் மட்டும் எட்டு கோடி வரை வசூல் செய்து கொடுத்து விட்டு தாங்கள் ஏமாற்றபட்டது தெரிய வந்ததும் மயக்கமாகி போக உடன் வந்த உறவினர்கள் அவர்களை கைத்தாங்கலாக கூட்டி சென்றது கொடுமை . சென்னை அசோக்நகரை சேர்ந்த வெற்றிச்செல்வி தன் பெண் திருமண செலவிற்காக வாங்கி போட்ட இடத்தை ஜந்து லட்சத்திற்கு விற்று போட்டதுடன் , அக்கம் பக்கம் தெரிந்தவர்களிடம் வசூல் செய்து கொடுத்த தொகை மட்டும்
இரண்டு கோடியாம் ??.

' ஐயா பேப்பர்ல விளம்பரம் , முதலமைச்சரிடம் கொரோனா நிதி இந்த பாவிங்க கொடுத்த செய்தி படத்தையெல்லாம் எங்ககிட்ட காட்டும் போது நாங்க எப்படிய்யா நம்பாம இருப்போம் ?. இந்த மோசடிக்காரனுங்க புதுக்கோட்டையில சொந்த சிலவுல சாய்பாபா கோவில் வேற கட்டியிருக்கிறதா போட்டா புடிச்சி காட்டினாங்க ' என்று புலம்புகிறார் வெற்றிச்செல்வி .
ஒரு லட்சத்திற்கு பதினைந்தாயிரம் வட்டி , ஆள் பிடிச்சி கொடுப்பவர்களுக்கு மாதா மாதம் இரண்டு பர்சன்ட் கமிஷன் ( இரண்டாயிரம் ) என்கிற பசப்பு வார்த்தைகளை கூறி சுமார் அறுபதாயிரம் கோடி வரை மோசடி நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கிறார்கள் .
மீடியாக்கள் கம்பெனி ஊழியர் ஒருவரை மடக்கி பிடித்து விசாரிக்க அவரோ ( ரோஸ் கலர் சட்டை ) ' அதோ அந்த வழுக்க மண்டைக்குதான் மொத்தமும் தெரியும் ' என ஒருவரை கை காட்டி விட்டு பறந்தார் . சுரேஷ் என்கிற அவரை மக்கள் சுற்றி வளைக்க போலீசார் அவரை மக்களிடமிருந்து பத்திரமாக பாதுகாத்து விசாரணைக்கு கூட்டிச் சென்றார்கள் .-# கதிரை.துரை .

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)