மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

டிக்டாக்கில் தன்னை காதலிப்பது போல உணர்ச்சி வசப்பட்டு வீடியோக்களை பதிவிட்டு வரும் விபரீதச் செயலை நிறுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட துணை நடிகையை அறிவுறுத்துங்கள் என்று நகைச்சுவை நடிகர் யோகிபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்


தமிழ் திரை உலகில் 18 வருட கடின உழைப்பால் முன்னணி நகைச்சுவை நட்சத்திர அந்தஸ்தை எட்டிப்பிடித்திருப்பவர் நடிகர் யோகிபாபு..!


இவரை காதலிப்பது போல நடித்து வீடியோ பதிவிட்டு வந்த துணை நடிகை சுஜி என்பவர் யோகிபாபுவுக்கு திருமணம் ஆன நாள் முதல் காதல் தோல்வி அடைந்தது போல டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையை பற்ற வைத்தார் ...!


அவரது வீடியோவால் அண்மையில் திருமணம் முடிந்த கையோடு தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்று வரும் நடிகர் யோகிபாபு, குடும்பத்தில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்று உஷாராகி விசாரித்ததாக கூறப்படுகின்றது.


வீடியோ வெளியிட்ட துணை நடிகை தனது தீவிர ரசிகை என்றும் லைக்குகளை குவிக்க காமெடிக்காக இது போன்று செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இருந்தாலும் அந்த பெண் தொடந்து அழுது கொண்டே வீடியோ வெளியிடுவதால் யோகிபாபு கடும் அதிர்ச்சியில் இருந்துள்ளார்.


இது தொடர்பாக கோவாவில் படப்பிடிப்பில் உள்ள யோகிபாபு, நமது செய்தியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்த போது, அந்த நடிகையை இதுவரை நேரில் பார்த்தது கூட கிடையாது என்றும், அந்த நடிகை உண்மையிலேயே தன்னுடைய ரசிகையாக இருந்தாலும், மனைவி போட்டோவை எல்லாம் போட்டு டிக்டாக்கில் ரொம்ப பீல் பண்ணுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.


அவரது செயல் தவறானதாக இருந்தாலும் அந்த பெண்ணின் மனதை காயப்படுத்த விரும்பவில்லை என்று பெருந்தன்மையாக மன்னித்த யோகிபாபு, இது போன்று வீடியோ வெளியிடுவதை பார்த்தால், தனது குடும்ப வாழ்வில் மட்டுமல்ல அந்த பெண்ணின் குடும்ப வாழ்விலும் சிக்கல் உருவாக்கி விட போகின்றது என்றும், இது போன்ற விபரீத செயலை இனியும் தொடர வேண்டாம் என்று அவரது வீட்டில் அறிவுறுத்துங்கள் என்று சிரித்த படியே ((யோகிபாபு கேட்டுக் கொண்டார்...))


இதற்கிடையே டிக்டாக்கில் யோகிபாபுவுக்காக உருகி உருகி வீடியோ வெளியிட்ட அந்த துணை நடிகை சுஜியும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்


இதற்கிடையே டிக்டாக்கில் யோகிபாபுவுக்காக உருகி உருகி வீடியோ வெளியிட்ட அந்த துணை நடிகை சுஜியும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)