Posts

சென்னை: லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என பணம் பறிக்க முயற்சி; உஷாரான அதிகாரியின் மனைவி

Image
  சென்னை தரமணியில் உள்ள அரசு நீர்வளத் துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருபவர் அசோகன் (56). இவர் கடந்த 23 ஆம் தேதி பணியில் இருந்தபோது அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக் கூறிக் கொண்டு ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில், தங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன. உங்களை கைது செய்ய வாரண்டும் உள்ளது. அதை சரி செய்வதற்கு 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து பயந்துபோன அசோகன், வாகன ஓட்டுநர் முகுந்தன் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் எனக் கூறிய நபர் ஆகிய 3 பேரும் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அசோகின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அசோகன் தனது வீட்டில் பீரோவில் மனைவி ஏதாவது பணம் வைத்திருக்கிறாரா என பார்த்துள்ளார். அப்போது அதில், பணம் எதுவும் இல்லாததால் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஐஓபி வங்கி லாக்கரில் பணம் இருக்கிறது. அங்கு சென்று பணத்தை எடுத்துத் தருவதாகக் கூறி வீட்டில் இருந்த லாக்கர் சாவியை எடுத்துக் கொண்டு அசோகன் சென்றுள்ளார். ஆனால், அசோகனின்

ஆவினில் பால் பாக்கெட்டை திருடும் திண்டுக்கல் ஊழியர்: வீடியோ வெளியான நிலையில் சஸ்பெண்ட்

Image
  திண்டுக்கல் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட்டுகளை ஊழியர்கள் திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் சுமார் 30,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், பால் பதப்படுத்தப்படும் நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள் சிலர் பால் பாக்கெட்டுகளை திருடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பால் பாக்கெட்டை திருடும் நபர்களின் உருவம் நன்றாக பதிவாகியுள்ளது. இதையடுத்து ஆவின் பொது மேலாளர் இளங்கோ, முதல் கட்டமாக அங்கு பணியாற்றி வரும் முகமது அஷ்ரப் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதில் தொடர்புடைய இரண்டு ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்

வீடியோ கால் மூலமாக மருத்துவருடன் பேசி செவிலியர்களே பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த விவகாரம்- மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Image
  வீடியோ கால் மூலம் மருத்துவருடன் பேசி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் சிசு இறந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல்செய்ய பொதுச் சுகாதாரத்துறை இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அருகே உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரின் மனைவி புஷ்பா, பிரசவத்திற்காக மதுராந்தகம் அருகே உள்ள இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் மருத்துவரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி பிரசவம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதில் புஷ்பாவுக்கு பிறந்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. இதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சமயபுரத்தில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம் -காவலர் சஸ்பெண்ட்

Image
  திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தது தொடர்பாக காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தரிடம் செல்போன் திருடியதாக முருகானந்தம் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், காவல்நிலைய கழிவறையில் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார். முருகானந்தம் தனது இடுப்பில் அணிந்திருந்த கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில், மதுபோதைக்கு அடிமையான அவர் மீது, தாயை அடித்துக் கொன்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை கைதி மரணமடைந்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்று திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் தெரிவித்துள்ளார். பணியில் அலட்சியமாக இருந்ததாக சமயபுரம் காவல் நிலைய காவலர் ராம்கி என்பவரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி எஸ்.பி. சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார். இதே காவல்நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் என்ற விசாரணை கைதியை காவல்துறையினர் அடித்துக் கொன்றதாக வழக்கு உள்ளது

சோழிங்கநல்லூரில் உபர் ஆட்டோவில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறல்

Image
  சென்னை சோழிங்கநல்லூரில் உபர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறி நடந்துகொண்டதாக அந்த பெண் நேற்றிரவு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இரவு புகார் கொடுத்த அந்த இளம்பெண் இதுகுறித்து அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தது வைரலானது. அதை தொடர்ந்து செம்மஞ்சேரி காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை தரமணியில் உள்ள தனியார் இதழியல் கல்லூரி ஒன்றில்  படித்து வரும் பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். நேற்றிரவு அவரது தோழி ஒருவருடன் ஈசிஆரிலிருந்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு உபர் ஆட்டோ புக் செய்து அதன்மூலம் வந்ததாக தெரிவித்துள்ளார். ஹோட்டல் வந்தவுடன் இறங்கியபோது ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது ஆட்டோ புக் செய்த அவர்களை ஆட்டோவில் ஏற்றுவதற்கு முன்பு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி என்னிடத்தில் இல்லை பணமாக கொடு

பல்லாவரம் அருகே ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Image
  பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்  பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சமீப காலமாக இவர் பள்ளி பாடங்களை ஒழுங்காக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது ஆசிரியர்  கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வீட்டில் அனைவரும் அவரவர் வேலைக்கு செல்லும் வரை பள்ளிக்கு தயாராவது போல் ரெடியாகி கொண்டிருந்தவர் வீட்டில் அனைவரும் அவரவர் பணிக்கு கிளம்பியவுடன் தனது துப்பட்டாவால் தன்னைத்தானே கழுத்தை இறுக்கி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மாணவி  துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த மாணவியின்  உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வீச்சு தாக்குதலுக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்..!

Image
  கேரளாவில் பிஎப்ஐ அம்  பேருந்துகள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதால் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை ஓட்டுநர்கள் ஓட்டி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ அமைப்பின் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை நடத்தினர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 மையங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன் எளமரம் உள்ளிட்ட 106 பேர் சோதனையில் கைது செய்யப்பட்டனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் சி.பி. முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பேராசிரியர். பி. கோயா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி நடத்தப்பட்ட நாடு தழுவிய என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலக் குழு இந்த முழு அடைப்பு போராட்டத