சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு

 


கடந்த 2019 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் தனக்கு காவல்துறையில் வழங்கப்பட்ட கை துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு சீருடை அணிந்தும் சீருடை இல்லாமலும் சினிமா ஹீரோ போல போட்டோ சூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் தனக்கு தெரிந்த ரௌடிகளை வைத்து முரளி கிருஷ்ணாவை தொலைபேசி மூலம் மிரட்டியும் உள்ளார். ஆகவே இசக்கி ராஜா தான் பிரபலம் ஆக வேண்டும் என நினைத்து அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு ரவுடிகள் போல சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு மனித உரிமை மீறலில் செயல்பட்டு வருகிறார் என்றும் இதனால் எனக்கும் என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதால் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையத்தில் சமூக வலைதள செய்தி யூடியூப் சேனல் முரளி கிருஷ்ணா புகார் கொடுத்து இருந்தார்.

மக்களை திசை திருப்பி தற்போது நேர்மையான காவல் அதிகாரியாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வலம் வந்து கொண்டிருக்கும் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உண்மை என்றும் அதற்காக உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜாசம்பளத்தில் 1,00,000 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்து

காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை பற்றி யூடியூப் செய்தி வெளியிட்ட முரளி கிருஷ்ணா வழங்க வேண்டும் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் காவல்துறை வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து  யூடியூப் செய்தி முரளி கிருஷ்ணாவுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பு எதிரொலியால் திண்டுக்கல் மாவட்டம் காவல் அதிகாரிகளிடம் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல்!

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்