காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்
நெல்லை போலீஸ் விசாரணைக்கு வந்தவர்களை ஏஎஸ்பி பல்லை பிடிங்கி சித்தரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் விகேபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆயுதப
டைக்கு மாற்றம் செயது நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மீது அதிருப்தியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எத்தனையோ பாரம்பரிய வரலாறு கொண்ட மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. அதே சமயம் குற்ற சம்பவங்களில் பதட்டமான மாவட்டமும்கூட. இந்நிலையில், இங்கு சட்ட ஒழுங்கை பேணி காப்பதில் காவல்துறைக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அவ்வாறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தாமல் ஒரு தனி தண்டனை சாம்ராஜ்யத்தை உருவாக்கி கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங்க் மீது குரூர குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
இவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தபோதே அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக பார்க்கப்பட்டது. இப்போது விசாரணை நடந்து வரும் நிலையில் முக்கிய சாட்சியான சூர்யா கீழே விழுந்து பல் உடைந்ததாக மீடியா முன்பு கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் அவர் தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை. அவரை எதிர்பார்த்து நான்கு மாத குழந்தையுடன் அவரது குடும்பம் தவித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள இரு காவலர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யாமல் ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. மேலும், பல் பிடுங்கிய விவகாரத்தில் மூளையாக செயல்பட்டதாக சொல்லப்படும் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. எதை நோக்கி இந்த விசாரணை செல்கிறது? இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையத்தின் தலையீடு என்ன? தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் விளக்கம் தான் என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் சமூகத்தில் சுழல்கின்றன.