தெய்வத்திருமகள்... தந்தைக்கு கல்லீரலை தானமாக வழங்கிய 17 வயது சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்..!

 


தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை நிலை, லட்சக்கணக்கில் செலவு போன்றவற்றை அறிந்து பரிதவித்த பிரதீஷின் மகள் தனது கல்லீரலை தந்தைக்கு தானமாக வழங்கினார்.

கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்த பிரதீஷ் (48) கணினி மையம் நடத்தி வருகிறார். இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை நிலை,  லட்சக்கணக்கில் செலவு போன்றவற்றை அறிந்து பரிதவித்த பிரதீஷின் மகள் நந்து (17), தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முன்வந்தார். சட்டவிதிகளின் படி சிறார் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியாது. இதனால் உயர் நீதிமன்றத்தில் நந்து மனு தாக்கல் செய்து சிறப்பு அனுமதி பெற்றார். அதன் பிறகு நந்துவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்த நந்து தனது உணவுப் பழக்கத்தை முழுமையாக மாற்றினார். அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு தினமும் சென்று மிகக் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்தார். இதன் பலனாக ஒரு மாதத்துக்குள் அவரது கல்லீரலில் படிந்திருந்த கொழுப்பு கரைந்தது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)