செங்கோட்டையில் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி
செங்கோட்டை பார்டர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செங்கோட்டை ரெட்போர்ட் ஜிம் அன் பிட்னஸ் மற்றும் ஐஎப்எப் சார்பில் மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி நடந்தது. போட்டியில் உடற்தகுதி, எடை தகுதி என்று பல பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் செங்கோட்டை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தகுதியான 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜீத்குமார் என்பவா் மிஸ்டா் தமிழ்நாடு 2022 பட்டம் வென்றார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளா் சிவபத்மநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றியச்செயலாளா் திவான்ஒலி, மாவட்ட பொருளாளா் எம்ஏ.ஷெரீப், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்எம்.ரஹீம், நகரச்செயலாளா் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், பெரியபிள்ளைவலசை ஊராட்சி மன்ற தலைவா் வேல்சாமி, வல்லம்செல்வம், கொட்டாக்குளம்இசக்கிப்பாண்டியன், பேரூர் கழக நிர்வாகிகள் தொழிலதிபர்கள் செல்வகணபதி, சாமி, கிளாடுசன், சேக்அப்துல்லா, உள்பட பலா் கலந்து கொண்டு சிறந்த ஆணழகனுக்கான விருதுகள், சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனா்.
முதல் மூன்று இடம் பிடித்த போட்டியாளா்களுக்கு பரிசினை மாவட்ட செயலாளா் சிவபத்மநாதன் வழங்கினார். ஓவர்ஆல் சேம்பியன் பட்டம் வென்றவருக்கு கிளாடுசன் பணமுடிப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில ஐஎப்எப் செயலா் ஜெகநாதன், தென்காசி மாவட்ட ஐஎப்எப் துணைத்தலைவா் வழக்கறிஞா் அபுஅண்ணாவி, செயலா் பாஷா, பொருளாளா் இம்தியாஸ், இராமநாதபுரம் செயலா் சைன், மதுரை செயலா் தனசேகரன், கோவை செயலா் தீபாராணி, திருநெல்வேலி செயலா் நாராயணன், போட்டி நடுவர்கள், உடற்பயிற்சியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் தொழிலதிபர் காதர்மைதீன் நன்றி கூறினார்.-R.பாலகுரு நிருபர்