மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மனித உரிமை ஆணைய அலுவல கம் அமைந்துள்ளது. இதில் தலைவராக பாஸ்கரன் உறுப்பினர்களாக துரை ஜெயசந்திரன், சித்தரஞ்சன் மோகன்ராஜ் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பி னர்களாக உள்ளனர்.தமிழ கத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் சம்பந்த மாக வரும் புகார்கள் மற் றும் பத்திரிகைகளில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக வரும் செய்திகளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகள் பணி நிறைவடைந்த நிலையில் நேற்று துரை ஜெயசந்திரன் அவர் ஓய்வு பெற்றார். அவருக்கு மனித உரிமை ஆணையத்தின் தலைவர். உறுப்பினர்கள். பதிவாளர், ஊழியர்கள் அவருக்கு பாராட்டி வழி யனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து துரை ஜெயசந்திரன் கூறி யதாவது, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதிமனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக பதவி யேற்று நேற்றுடன் 5 வருடங்கள் நிறைவ டைந்து பணி ஓய்வு பெறுகிறேன். இந்த 5 ஆண்டுகளில் ஆணையத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடம் சிறப்பான முறையில் கொண்டு சென்ற பத்திரிகைகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படை யில் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குகளை அரசுக்கு பரிந்துரை செய்து அரசால் நிறைவேற்றப்பட் டுள்ளது.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டு அவற்றில் 10,448 வழக்குகள் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு வராததால் முடித்து வைக்கப்பட்டது. அவற்றின் 8,030 வழக்குகளில் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளுக்கு நடவடிக் கைக்காக அனுப்பி அவர்களிடமிருந்து அறிக்கை பெற்று அதன் அடிப்படை யில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சுமார் 2,055 வழக் குகளில் சம்பந்தப் பட்ட மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் களுக்கு அழைப்பாணைகளை அனுப்பிவிசாரணை செய்து முடித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த 2,055 வழக்குகளில் சுமார் 421 வழக்குகளில் முழுமையான விசாரணை மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 426 வழக்குக ளில் சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. அநேக வழக்குகளில் இந்த ஆணை யத்தின் பரிந்துரையை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தக்க உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிரஸ் & மீடியோ ரிப்போட்டர்ஸ் யூனியன், எங்களுக்கும் அழைப்புகள் கொடுத்து பின்பு மாநிலத் தலைவர் மு.திவான் மைதீன் மாநில பொதுச் செயலாளர் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவருக்கு பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.