LOAN APP மோசடி கும்பல்.. வட மாநிலம் சென்று ஸ்கெட்ச் போட்டு தூக்கியது எப்படி?சென்னை போலிஸார்
இந்தியாவில் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோத கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர். சட்டவிரோத ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான செயலிகளை தடை செய்துள்ளது. ஆனாலும், மோசடி செயலிகளால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகின்றனர்.
இந்த கும்பலிடம் சிக்கி மாட்டிக் கொண்டவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த கும்பலை பிடிக்க சென்னை காவல்துறையின் மத்திய குற்ற பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலிஸார் தனிப்படை ஒன்றை அமைத்தனர். கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள செல்போன் செயலிகளை ஆராய்ந்தும், பாதிக்கப்பட்டவர்களுடனான மோசடி நபர்களின் குறுந்தகவல்களை ஆய்வு செய்து தகவல்களை போலிஸார் திரட்டியுள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தபோது கடன் செயலியிலி மோசடி செய்தது உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களிலிருந்து செயல்பட்டு வரும் கும்பல் என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர். பின்னர் உடனே உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநில சென்று அம்மாநில காவல்துறை உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் உத்தர பிரதேசத்தில் லோன் செயலிகளின் கலெக்ஷன் ஏஜென்ட்டான இருந்ததீபக்குமார் பாண்டே என்பதை கைதுசெய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி ஹரியானா சென்ற போலிஸார் ஜித்தேந்தர் தன்வர், அரது சகோதரி நிஷா, ஆகிய இருவரை கைது செய்தனர்.
அதேபோல் டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள் மற்றும் 19 சிம் கார்டுகளை போலிஸார் சைப்பற்றியுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த லோன் செயலி மோசடி கும்பல், கடன் வாங்கியவரை மிரட்டி பணம் கட்ட வைப்பது, அதிகமான பணத்தை வசூலிப்பதும் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் பெரிய நிறுவனங்களில் இருப்பதைபோன்று டீம் லீடர், டீம் மேனேஜர் போன்ற குழுக்களை உறுவாக்கி அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலைபார்த்து வந்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் கிடையாது. ஆன்லைனில் மட்டுமே தொடர்பில் இருந்து கொண்டு, இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள மோசடி செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.