செங்கல் சூளை அமைக்க லஞ்சம் - ஊராட்சி மன்ற தலைவர் கைது

 


மதகுபட்டி அருகே செங்கல் சூளை அமைக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அலவாக்கோட்டை கிராம ஊராட்சி மன்ற தலைவராக பிரகாஷம் என்பவர் இருந்து வருகிறார் இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளம் கம்பன் என்பவர் தன்னுடைய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கவும், அதற்கான மின் இணைப்பை பெறவும் ஊராட்சி ரசீது பெற தலைவர் பிரகாஷத்தை அணுகியுள்ளார்.


அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் ரூ.30 ஆயிரம் லஞ்சம்

கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத இளம் கம்பன் இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனைப்படி, முதல் தவணையாக ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து இளம் கம்பன் பிரகாஷிடம் வழங்கினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்