சட்ட விரோதமாக விற்பனை செய்யும் அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள்...

 


தமிழகத்தில் அரசு  டாஸ்மாக்  கடைகள்  மதியம்  12  மணி  முதல்  இரவு  10 மணி வரை  செயல்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் சட்ட விரோதமாக சந்து கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல்  விலைக்கு  விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வரும்  நிலையில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி சந்தைபேட்டையில் அதிகாலை முதலே  சட்ட விரோதமாக அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை  செய்யும்  வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி  வருகிறது.

இதுகுறித்து  அப்பகுதி  மக்கள் வீடியோ ஆதாரத்துடன் தம்மம்பட்டி  காவல் நிலையத்திலும்ம் ஆத்தூர் டிஎஸ்பி, அலுவலகத்திலும் புகார்  தெரிவித்தும்  போலீசார்  எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்  சந்துக்கடையில் மது விற்பனை செய்யும் நபர்களுக்கு ஆதரவாக  போலீசார் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு