கல்வீச்சு தாக்குதலுக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்..!

 


கேரளாவில் பிஎப்ஐ அம்  பேருந்துகள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதால் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை ஓட்டுநர்கள் ஓட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ அமைப்பின் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை நடத்தினர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 மையங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன் எளமரம் உள்ளிட்ட 106 பேர் சோதனையில் கைது செய்யப்பட்டனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் சி.பி. முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பேராசிரியர். பி. கோயா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி நடத்தப்பட்ட நாடு தழுவிய என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலக் குழு இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 22 பேர் கைது செய்யப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்