மாநகர காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர்..! போக்சோ சட்டத்தில் கைது...!

 


சென்னை ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டியராஜ் (50). இவர் சென்னை மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த, கணவனை பிரிந்த பெண், ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவருடன் பாண்டியராஜ், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக  உறவில் இருந்து வந்துள்ளார். அந்த பெண் குழந்தைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு 13 வயது ஆகி உள்ளது.

காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் தாயுடன் தகாத உறவில் இருந்த போது, சிறுமிக்கும் 13 வயதிலிருந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தற்போது அந்தப் பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  மீண்டும் அந்த பெண்ணை, காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் பாலியல் உறவுக்கு வருமாறு பல்வேறு விதங்களில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனைப் பொறுக்க முடியாத அந்த பெண், வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் மீது புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண் சிறுமியாக இருந்த காலகட்டத்தில் பலமுறை மிரட்டி காவல் உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை, வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)