பைக்கில் வந்த இளைஞர் டிராஃபிக் போலீஸை தாக்கியதால் சேலத்தில் பரபரப்பு

 


வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக்காவலரை, செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் வந்தஇளைஞர் தாக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர் தெற்கு போக்குவரத்து பிரிவில் போக்குவரத்துக் காவலராக பாண்டியன் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியே பொன்னம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜன் என்பவர் செல்போனில் பேசியபடி இருசக்கரஅப்போது அவ்வழியே பொன்னமமா பேட்டை பகுதியைச் சேர்ந்தகோகுல்ராஜன் என்பவர்

செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரை போக்குவரத்து காவலர் பாண்டியன், தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆதிரமடைந்தகோகுல்ராஜன், காவலர் பாண்டியனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கோகுலராஜ்

போக்குவரத்து காவலரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காவலரின் மூக்கு தண்டுவட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காவலரை தாக்கிய கோகுல்ராஜனை சேலம் நகர காவல் நிலையத்தில்

இதைத் தொடர்ந்து போக்குவரத்து வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கோகுல்ராஜ் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்தின் தம்பி மகன் என்பது தெரியவந்தது.

இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போக்குவரத்து காவலர் பாண்டியனை மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

சேல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டி வந்த நபரை தட்டிக் கேட்ட காவலரை தாக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்