காவலர்கள் காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குறாங்க... என்னத்த சொல்ல : தமிழக காவல்துறை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!
சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
தமிழக காவல் துறையின் ஆயுதப் படை உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரிய மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
காவல்நிலையத்தி... மனுதாரர்கள் 40 வயதை கடந்துவிட்டதாலும், மூவரும் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டம் - ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. சட்டம் -ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வது உயரதிகாரிகளின் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள நீதிபதி, நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் சட்டம்