ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி மாணவருக்கு ஆரஞ்சு உலக சாதனை தேசிய தியான் சந்த் விளையாட்டு விருது

 


தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை வணிகவியல் பயின்று வரும் மாணவர் R. ஜெயபாலாஜி 17 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு சார்பில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் ஆம் தேதி வரை ஜோத்பூர் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான (INDIA SKATE) ரோலர் ஸ்கேட்டிங் ஃபெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய மூன்றாவது ரேங்கிங் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டார்.இப் போட்டியில் சுமார் 15 க்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். 


 தனது ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சர்வதேசம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றதால் இவருக்கு தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று ஆரஞ்சு உலக சாதனை தேசிய தியான் சந்த் விளையாட்டு விருது வழங்கப்பட்டது.


மேலும் இவர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று கம்பம் பள்ளத்தாக்கில் அல்-அஸ்கர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் HAWK EYE வில்வித்தை அகாடமி நடத்திய தேனி மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டியில் ஓபன் பிரிவில் முதலிடம் பெற்றார். பரிசுகளை பெற்ற மாணவனை கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி M. தர்வேஸ் முகைதீன், மேலாண்மைக் குழு தலைவர் ஜனாப் S. செந்தால் மீரான், மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் ஹாஜி டாக்டர் H. முகமது மீரான், உடற்கல்வி இயக்குனர் டாக்டர் B.அக்பர் அலி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.-வே.பிரசாத் குமார்
தேனி 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)