கம்பம் அருகே நாகைய கவுண்டன்பட்டியில் பைக்கை தலையில் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தால் பரபரப்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாகைய கவுண்டன்பட்டி கிராமத்தில் கிழக்குத் தெருவில் வசிக்கும் ஆசை என்ற கனகராஜ் என்பவர் மகன் யுவராஜ் - (30)ஏழாம் வகுப்பு வரைபடித்துவிட்டு தனது சொந்தத் தோட்டத்தில் விவசாய பணி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சண்முகா நதி அணை சாலையில் உள்ள அவரது தோட்டத்தில் கிணற்றின் அருகே தலை குப்பிற இறந்த நிலையில்
அவர் தலைப்பகுதியில் பைக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி தோட்டத்து வேலைக்கு வந்த பணியாளர்கள் உடனடியாக ராயப்பன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தலையில் பைக்கை போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்து கொலைக்கான காரணம் குறித்தும் கொலை செய்த மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.-தேனி மாவட்ட நிருபர்S. பாவா பக்ருதீன்