பள்ளி சிறுவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூர ஆசிரியர்.. பாஜக ஆளும் மாநிலத்தில் தொடரும் அவலம் !
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் பகுதியை அடுத்துள்ள சன்டேகல்லூர் என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 2-ம் வகுப்பு பிடிக்கும் 7 வயது சிறுவன் ஒருவன் படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் சிறுவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கே வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுத்து கொண்டிருக்கையில் சிறுவனுக்கு அவசரமாக இயற்கை உபாதை வந்துள்ளது.
ஆனால் சிறுவனோ ஆசிரியரிடம் சொல்லாமல் இருந்ததால் அவனது ஆடையிலேயே மலம் கழித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை திட்டியதோடு மட்டுமின்றி தன்னிடம் இருந்த கொதிக்கும் வெந்நீரை எடுத்து சிறுவன் என்றும் பாராமல் அவர் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட வழியால் சிறுவன் அலறி துடிக்க, சத்தத்தை கேட்டு வந்த சக ஆசிரியர்கள் சிறுவனை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 40% தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கக்கூடாது என்று அந்த பகுதியிலுள்ள அரசியல் தலைவர்கள் மிரட்டல் விடுத்தது வருவதாகவும், இதனால் அவர்களும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இயற்கை உபாதை கழித்தால் ஆத்திரமடைந்த ஆசிரியர், சிறுவன் என்றும் பாராமல் அவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.