வழிப்பறி கொள்ளையனை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு.
தேனி மாவட்டம்.உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர் வழிப்பறியில் ஈடுபவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் . போதைப் பொருள் கடத்துபவர்களையும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களையும். ஒடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் காவல் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உத்தமபாளையம் தாமஸ் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக எஸ்,பி.உமேஷ் பிரவின் டோங்க்ரே அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. எனவே உத்தமபாளையம் துணைக்கண்காணிப்பாளர் திருமதி, ஸ்ரேயா குப்தா அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது, காவல் ஆய்வாளர் திரு, சிலைமணி ஆகியோர்கள் விசாரணையில், இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது, தெரிய வந்ததால், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு, முரளீதரன் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள், எனவே ராஜ்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டுள்ளது.-தேனி மாவட்ட நிருபர்S. பாவா பக்ருதீன்