வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் ஆட்சியர் தகவல்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் கடந்த 01.08.2022 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஆதார் எண் இணைக்கும் பணியினை துரிதப்படுத்தும் பொருட்டு 04.09.2022 அன்று சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் சுயவிருப்பத்துடன் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைப்பதற்கு, பொதுமக்கள் வழக்கமாக வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளில் வரும் 04.09.2022 அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, வாக்காளர்கள் தங்களது பகுதியில் நடைபெறவுள்ள ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம்களிலோ அல்லது பொது சேவை மையங்களுக்கு நேரில் சென்றோ தங்களது ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைத்து பயன்பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளீதரன் இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார். வே.பிரசாத் குமார்