விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிவரை ஜேசிபி இயந்திரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவலச் சம்பவம்

 


மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிவரை ஜேசிபி இயந்திரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய ஒருவர் ஜேசிபி இயந்திரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு வராததால் ஜேசிபி இயந்திரத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிவரை ஏற்றிச் செல்ல அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

கட்னி மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பிரதீப் முதியா கூறுகையில், "பாதிக்கப்பட்டவர் பர்ஹியில் விபத்துக்குள்ளானார். 108 ஆம்புலன்சை உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும்தொடர்புடைய நிறுவனம் மாறியதால் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸ் அருகிலுள்ள நகரத்திலிருந்து வர வேண்டி இருந்ததால் சம்பவ இடத்திற்கு வந்து சேர தாமதமாகி விட்டது.” என்று விளக்கம் அளித்தார்.

உள்ளூர் ஜன்பத் பஞ்சாயத்து உறுப்பினரும் ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளருமான புஷ்பேந்திர விஸ்வகர்மா, “கிடௌலி சாலையில் நடந்த விபத்தில் அவருக்கு (விபத்தில் பாதிக்கப்பட்டவர்) காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் இல்லாததால் மூன்று முதல் நான்கு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களிடம் உதவி கேட்டோம். அனைவரும் உதவி செய்ய மறுத்ததால், காயமடைந்தவர்களை எனது ஜேசிபி இயந்திரம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம்” என்று தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)