துபாயிலிருந்து தங்கத்தை கடத்திய குருவிக்கு நேர்ந்த பரிதாபம்!லாட்ஜில் கேட்ட அலறல் சத்தம்
வெளிநாட்டிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த குருவியை காரில் கடத்திவந்து தாக்கியதாக திமுக நகர துணைச் செயலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், கடந்த 7 ஆம் தேதி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் குக்கரில் மறைத்து வைத்து 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருக்கிறார். இதையடுத்து கடத்தி வந்த தங்கத்தை காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்காமல் தனது தம்பிகளோடு சேர்ந்து நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது அதில் தங்கம் இல்லை என அங்கேயே போட்டுவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையில் உள்ள ஆனந்தராஜ் வீட்டிற்கு வந்த கும்பல் அவரை காரில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு கடத்தி வந்து தங்கத்தை தருமாறு தாக்கியுள்ளனர்.
அதனை பார்த்த விடுதியில் இருநதவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல்
அளித்துள்ளனர். அதன் பேரில் ஆனந்தராஜிடம் புகாரை பெற்று அவரது குடும்பத்தாரை கடத்தி தாக்கிய காரைக்காலைச் சேர்ந்த இதயத்துல்லா (40), பாலகன் (29), ஆற்காட்டைச் சேர்ந்த திமுக துணை நகர செயலாளர் ரவிக்குமார், தினேஷ், நவீன் ஆகிய ஐந்து பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து பிஎம்டபிள்யூ உள்ளிட்டசொகுசு காரர்களை பறிமுதல் செய்த அரும்பாக்கம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்