ஸ்டேஷன்களில் கேமரா: டி.ஜி.பி., சைலேந்திர பாபு தகவல்


 ''தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன,'' என டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார்.

தஞ்சாவூரில், நேற்று நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, போக்குவரத்து பூங்கா பணிகளையும் டி.ஜி.பி., சைலேந்திர பாபு பார்வையிட்டார். அதன் பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது; தஞ்சாவூரில் நடந்த 5.50 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில், முக்கியமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளோம். விரைவில் நகைகளை மீட்பதற்கான பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில், ஒரு போலீஸ் ஸ்டேஷனை தவிர, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. குழந்தைகள் தற்கொலை தொடர்பாக, உரிய புலன் விசாரணையை போலீசார் மேற்கொள்கின்றனர். இதை தவிர, 222 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில், கவுன்சலிங் செய்யக்கூடிய இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். அவர்களுக்கு, தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியர்களோ, பெற்றோர்களோ குழந்தைகளிடம் தற்கொலை எண்ணங்கள் இருப்பதை அறிந்தால், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ஆலோசனை பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!