ஆதார் விபரங்களை பெற அலையத் தேவையில்லை... இந்த ஆப் இருந்தால் போதும்

 


இன்றைய தொழில்நுட்பங்கள் அனைத்தும் அசுர வளர்ச்சிப் பெற்றுள்ளது. அதற்கேற்றால் போல் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கவோம் என்ற கனவோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் டிஜிட்டல் மயமாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து துறைகளிலும் இ-சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகங்களுக்கு சென்று ஏதாவது ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்றால் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படும். நாள் முழுவதும் வீணாகக்கூடாது என்பதற்காக டிஜிட்டல் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு எந்த அரசு அலுவலகங்களுக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தே தான் மக்கள் தங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். இதற்காக உமாங் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த செயலியின் மூலம் பிஎஃப் பேலன்ஸ் சரிப்பார்ப்பது, பிஎஃப் பணம் எடுப்பது மற்றும் தகவல் மாற்றங்கள் போன்ற அனைத்து சேவைகளையும் பெறலாம். இதுவரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான சுமார் 16 விதமான சேவைகளை பணியாளர்களுக்காக உமாங் செயலி வழங்கிவருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அனைத்து இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் தொடர்பான விபரங்களையும் இனி உமாங் செயலி மூலம் பெறலாம் என “உமாங் ஆப் இந்தியா“ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனவே இனி உங்களின் ஆதார் தொடர்பான விபரங்களை பெறுவதற்கு இனி எங்கும் அலையாமல் இந்த ஆபின் உதவியோடு பெற்றுக்கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் 9718397183 என்ற நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து அனைத்து விபரங்களையும் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம் என டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது.


அப்படி என்னென்ன ஆதார் சேவைகளை UMANG செயலி மூலம் பெற முடியும்?

1. பொதுமக்கள் உங்களின் ஆதாரில் உள்ள பெயர், முகவரி, போன்ற அனைத்து ஆதார் தொடர்பான விபரங்களைச் சரிபார்த்து கொள்ளலாம்.

2. ஏற்கனவே நீங்கள் புதிய ஆதாருக்கு விண்ணப்பித்திருந்தால் அதன் ஸ்டேடஸ் எப்படி உள்ளது? பதிவு செய்தல் போன்றவற்றின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

3. ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் மற்றும் மின்னஞ்சலை சரிபார்க்கலாம்.

4. ஆதார் நம்பர் அல்லது ஆதார் என்ட்ரோல்மென்ட் ஐடியை கண்டுபிடிப்பது போன்ற 4 புதிய சேவைகளை நீங்கள் இனி வரும் காலங்களில் UMANG செயலி மூலம் பெறலாம்.

5. எனவே இதுப்போன்ற வழிமுறைப் பின்பற்றி இனி எந்த வீண் அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தப்படியே ஆதார் விபரங்களை சுலபமாக பெற்றுவிடலாம்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்