வாங்கிய பர்க்கரில் கையுறை..அதிர்ந்துபோன வாடிக்கையாளர்
திண்டிவனத்தை சேர்ந்த டேவிட் ( 29.) இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.
இவரும் இவரது நண்பரும் ஆரோவில் அருகே உள்ள பிரபல உணவுக்கடையான கேஎஃப்சி சிக்கன் சென்டரில் பர்கர் வாங்கி உள்ளனர். அதை சாப்பிடும் போது அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது (கை உறை) தெரியவந்தது.
அதை உடனடியாக ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு பர்கர் தருவதாக கூறினார். அதற்கு டேவிட் வேண்டாம் என தெரிவித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார்.