ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்

 


ஆரணியிலுள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் கம்பி கட்டும் கூலி வேலை தொழிலாளி முரளி. இந்நிலையில் இன்று பிற்பகலில் முரளி தன்னுடைய உறவினரின் காரிய சடங்கிற்காக ஆரணியிலுள்ள பாலாஜிபவன் சைவ உணவகத்தில் 35 சாப்பாடு வாங்கிச் சென்றுள்ளார். அப்போது உறவினர்கள் சாப்பிடும் போது சாப்பாட்டிலுள்ள பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை இருந்ததையடுத்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் பாலாஜிபவன்
ஹோட்டலுக்கு சென்ற முரளி மற்றும் உறவினர்கள் 20 க்கும் மேற்பட்டோர், இறந்து கிடந்த எலியின் தலையை கையில் வைத்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீஸார், ஓட்டலுக்குச் சென்று இறந்த எலியின் தலையை கைப்பற்றி உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பி வைத்து உண்மை தன்மை கண்டறியப்படும் என உறுதியளித்ததின் பேரில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்
இந்நிலையில் இதற்கு முன்னர் ஆரணியில் தனியார்
உணவகங்களில் உணவு சாப்பிட்டு இரண்டு மாணவர்கள் இறந்துபோன சம்பவம் மனதைவிட்டு மறையும் முன்பே, இன்று நடந்த இந்த நிகழ்வால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்