சினிமா தியேட்டருக்கு நுகர்வோர் கோர்ட் அபராதம்
 திருப்பூர், செப், டிக்கெட் புக்கிங் செய்து, சென்றவரை அனுமதிக்க மறுத்த தியேட்டர் நிர்வாகத்துக்கு திருப் பூர் நுகர்வோர் கோர்ட் அபராதம் விதித்தது. திருப்பூர், தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் செல் இவர், 2019 நவ., மாதம் திருப்பூர் வதாயகம். ஸ்ரீசக்தி சினிமாஸ் தியேட்டரில் 'பிகில்' படம் பார்க்க, மூன்று டிக்கெட் ஆன்லைன் மூலம் புக் கிங் செய்தார்.

அன்று மாலை காட்சிக்கு அவர் தன் குடும்பத்துடன் சென்றார். அவரது டிக் கெட்டை வாங்கிப் பார்த்து உறுதி செய்த ஊழியர், செல்வநாயகம் மது அருந்தியிருப் பதால் அனுமதிக்க முடியாது எனக் கூறி யுள்ளார்.

அந்த சமயத்தில் அவர் மது அருந்தவில்லை என்று வாதாடியும், தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்ததோடு, டிக்கெட் கட்டணத்தை திரும்ப தர மறுத்து திருப்பி அனுப்பினர். இது குறித்து செல்வந புகம் திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த, நுகர்வோர் கோர்ட் நீதி பதி தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேத் திரன் ஆகியோர், 'டிக்கெட் கட்டணம் 289 ரூபாய்; அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப் பியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5,000 மற்றும் வழக்கு செலவுக்கு 5,000 ரூபாயை தியேட்டர் நிர்வாகம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்