பரோட்டா மாஸ்டரை தாக்கிய போதைஆசாமிகள்!

 


ஆத்தூர் அருகே ஆஃப்பாயில் முட்டையில் மிளகு தூள் அதிகமாக தூவி பரிமாறப்பட்டதால் ஆத்திரத்தில் பரோட்டா மாஸ்டரை நான்கு பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி நான்குரோடு சந்திப்பில் உள்ள ஓட்டலுக்கு மதுபோதையில் நான்கு பேர் சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் கேட்டுக் கொண்டபடி பரோட்டா மாஸ்டர் ஆஃப்பாயில் முட்டையை சமைத்து கொடுத்த நிலையில், அதில் மிளகு தூள் அதிகம் சேர்க்கப்பட்டிருப்பதாக நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சண்டை முற்றியதில், ஓட்டல் உரிமையாளரையும், அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.

பின்னர் கடையில் இருந்த தோசை மாவு, முட்டைகளை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெங்கவல்லி பேரூராட்சி தலைவர் மகனை தாக்கியதாக ஏற்கெனவே இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை