ஆர்கேநகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கத்தியுடன் சுற்றிய 5 பேர் கைது!


 சென்னை ஆர்கேநகர் பகுதியில் இருந்து அப்பகுதியை  சேர்ந்த பக்தர்களால் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக 
ஊர்வலத்தின் போது மது அருந்தி விட்டு கத்தியுடன் சுற்றிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ஊர்வலாமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஊர்வலத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை வைத்து கொண்டு 5 இளைஞர்கள் தங்களுக்குள்ளேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்களின் அட்டகாசத்தை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் ஆர்கே நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் நாகேந்திரன், தமிழ்செல்வன், ஆனந்த், இம்ரான், சம்மையா என தெரியவந்தது. தொடர்ந்து ரவுடிகள் போல் ஊர்வலத்தில் கத்தியுடன் உலா வந்ததை உறுதி செய்ததையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: அசோக்குமார், சென்னை

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு