அனுமதி இல்லாமல் சரளை மண் கொண்டு சென்ற லாரி பறிமுதல்... 2 பேர் கைது
கோவில்பட்டியில் அரசின் உரிய அனுமதி இல்லாமல் சரளை மண் கொண்டு சென்ற லாரி, 1யூனிட் சரளை மண் ஆகியவற்றை நாலாட்டின்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் பொன் மாடசாமி, டிரைவர் செல்லக்கனி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டாம்பட்டி பகுதியில் நாலாட்டின் புதூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை நடத்திய போது உரிய அனுமதி இல்லமால் சரளை மண் கொண்டு செல்வது தெரியவந்தது.
மேலும் குண்டுக்கல் - சக்கை கொண்டு செல்வதாக அரசிடம் பெற்றதாக கூறப்படும் அனுமதி சீட் வைத்து இருப்பதும் தெரியவந்தது. அரசின் உரிய அனுமதி இல்லாமல் சரளை மண் கொண்டு செல்லப்படுவது உறுதியானது. இதையெடுத்து போலீசார் 1யூனிட் சரளை மண்ணுடன் இருந்த லாரியை பறிமுதல் செய்தனர்.