தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே போலியான மதுபானங்கள் விற்றதாக கைது 16மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி வடக்குதெருவை சார்ந்த அதிவீரத்தேவர் மகன் தொந்தி என்பவர் அனுமந்தன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக உத்தமபாளையம் காவல்துறை போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேரில் சென்று விசாரணை செய்தலில் மந்தையம்மன் கோவில்தெருவில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து தொந்தியிடம் இருந்து 16 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். காவல் நிலையத்தில் தொந்தி மீது விசாரணை மேற்கொண்ட சார்பு ஆய்வாளர் திவான்மைதீன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தொந்தி மீது வழக்குப்பதிவு செய்தார்.-தேனி மாவட்ட நிருபர் S. பாவாபக்ருதின்