இணையம் மூலம் அரசு விரைவுப் பேருந்தில் பயணிகளுக்கு 10% ஆஃபர் - முழு விபரம் இதோ

 


இணையம் மூலம் இருவழிப் பயணச்சீட்டை முன்பதிவு செய்வோருக்கு, திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுவதாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் அதிநவீன மிதவைப் பேருந்து. குளிர்சாதனப் பேருந்து. குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து. கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்ந்து, மொத்தம் 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 300 கி.மீக்கும் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம்ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம், ஒரு மாதத்துக்கு முன்பே பயணச்சீட்டைஇந்நிலையில், பயணிகள் நீண்ட தொலைவுப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிப்போரை ஈர்க்கவும், விழா நாட்கள் நீங்கலாக, இதர நாட்களில் இணையவழி மூலமாக இருவழிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தற்போது இந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரே நேரத்தில் ஊருக்குச் சென்று வருவதற்கான பயணச்சீட்டை இணையவழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. விழா நாட்களுக்கு இந்த சலுகை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்