கொலைகள்.. தப்புகணக்கு சுட்டிக்காட்டி போஸ்ட் போட்ட போலீஸ்... கமெண்ட்டில் விமர்சிக்கும் நெட்டிசன்கள்

 




தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சித்த நிலையில், இது தொடர்பாக தமிழக காவல்துறை விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், ல், குற்றங்களைத் தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஆர்வமின்றி, விளம்பர மோகத்தால் திளைத்துள்ளதால் இன்று தமிழகம் முழுவதும் கொலைக் களமாக மாறி வருவது கண்டு மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 36 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக தெரிவித்த அவர், கொலையானவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டிருந்தார். இதேபோல்,  இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை . முன் விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட ஒருசிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக வெளியான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். காவல்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்தியில், சில ஊடகங்களில் பட்டியிலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு நடந்தவை என்றும் பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனி நபர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக  நடந்தவை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2022 ஆகஸ்ட் 22-ல், 7 கொலைகளும், 23-ம் தேதி 5 கொலைகளும் மட்டுமே நிகழ்ந்துள்ளன. மேலும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 940 கொலைகள் நடந்துள்ளதாகவும் கடந்த 2021-ல் இதே காலகட்டத்தில் 925 கொலைகளும், 2019 ஆம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளதாகவும் ஆகவே தற்போது குறைந்கதிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்ய முடியாதபடி கமெண்ட் ஆப்ஷன் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில், முகநூலில் இடப்பட்டுள்ள பதிவின் கீழ் பலரும் 2 நாட்களில் 12 கொலைகள் என்பதும் பெரியது தான் என கமெண்ட் செய்துள்ளனர். இதேபோல், அரசியல் ரீதியிலாக எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு முந்தைய ஆண்டுகளை விட கொலை குற்றம் குறைந்துள்ளது என தமிழக காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதையும் பலர் விமர்சித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)