மாநகராட்சி “பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை”
சென்னை மாநகராட்சியின் பொதுக்கழிப்படத்தை பயன்படுத்த கட்டணம் பெற்ற இரண்டு நபர்கள் மீது காவல்துறையில் மாநகராட்சி புகார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டலத்தில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலித்த 2 நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இராயபுரம் மண்டலம். வார்டு 59க்குட்பட்ட பிராட்வே பேருந்து நிலைய வளாகம் மற்றும் பிராட்வே பேருந்து நிலையம் எதிரில் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்த 2 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது காவல்துறையில் புகார் பதியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.