ஒத்தப்பட்டியில் ஊராட்சி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசியல் தகவல்

 


தேனி மாவட்டம் சஉத்தமபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஒத்தப்பட்டியில் ஊராட்சி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்துள்ளது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டு அந்த வழியே சந்தேகபடும் படியாக வந்த ஒத்தப்பட்டியை சேர்ந்த பாலமுருகன்(22),  ராமர் (38), மற்றும் கம்பம் வடக்கு பட்டியை சேர்ந்த பிரகாஷ் (27) ஆகிய 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ராயப்பன்பட்டியை சேர்ந்த அமலன் (29) என்பவர் திருச்சியில் விற்பனை செய்வதற்காக பாலமுருகனிடம் கஞ்சாவை வாங்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து  2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைதான நான்கு பேரையும் ராயப்பன்பட்டி போலீசார் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்-வே.பிரசாத் குமார் தேனி

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை