தங்கை பயணத்தை நிறுத்த அண்ணன் செய்த காரியம் - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
சென்னையில் இருந்து இன்று காலை 7.35 மணிக்கு துபாய் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து 174 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் துபாய் செல்லவிருக்கும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில், வெடி குண்டுடன் ஒருவா் பயணிக்கிறாா் என, ஒருவர் பேசிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதை அடுத்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிரமாக சோதனை நடத்தினா். மேலும் விமானத்திலிருந்த 174 பயணிகளையும் தீவிரமாக சோதனை செய்தனா். ஆனால் அவர்களுக்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதை அடுத்து காவல் நிலையத்திற்கு வந்த அந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அது சென்னை மணலியில் உள்ள ரஞ்சித் குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. இதைனை அடுத்து காவல்துறையினர், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது தங்கையும், தங்கை கணவரும் இன்று இண்டிகோ விமானத்தில் துபாய் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் இவர்களுக்குள் ஏதோ குடும்பப் பிரச்சனை இருப்பதால், அந்த பிரச்சனை காரணமாக இதை போல் வதந்தியை கிளப்பி உள்ளார் என தெரியவந்தது. இதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக துபாய் செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 3 அரை மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு புறப்பட்டது.