நடுரோட்டில் அலறியபடி ஓடிய ரவுடி.. துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்!

 


சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் 30 வயதான பிரபல ரவுடி சந்தீப்குமார். இவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இவர், நேற்று மாலை 4.30 மணி அளவில் அண்ணாநகர், மடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோ ஓட்டியபடி வந்தார். அங்கு, உறவினர்களிடம் பொதுவாக பேசிவிட்டு தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார். 

அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரை வழிமறித்து அரிவாள், பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பொதுமக்களிடம் தன்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று அலறி கூச்சலிட்டு நடுரோட்டில் ஓடியுள்ளார். ஆனால், அவ்வளவு கூச்சலிட்டும் யாரும் உதவிக்கு வராததால் அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.

அதில், படுகாயமடைந்த சந்தீப் குமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து அந்த மர்ம கும்பல் இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

தகவலறிந்த அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தீப் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 2018ம் ஆண்டு ரவுடி ஆதித்யா என்பவரை அண்ணாநகரில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப்குமார் சிறையில் இருந்து வெளியே வந்து ஆட்டோ ஒட்டிவந்ததும், நேற்று இந்த கொலை நடந்ததாகவும் தெரியவந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மடுவாங்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடன் பேசிவிட்டு, தனது வீட்டிற்கு செல்லும்போது படுகொலை செய்யப்பட்டது. 

கொலைக்கான காரணம் :மேலும் நண்பர்களுடன் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதாகவும், அதனால், அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆதித்யாவை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்ததா, நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்து நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)