நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்.7 ல் வெளியீடு: ஒன்றிய தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வ அறிவிப்பு

 


டெல்லி: மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தாண்டு நீட் தேர்வு எழுத 18.72 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 

இருப்பினும் 17.78 லட்சம் பேர் மட்டுமே நீட் தேர்வினை எழுதியுள்ளனர். இந்தாண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் நிலவியதால் மாணவர்கள் குழப்பம் அடைந்திருந்த நிலையில், தேர்வு முடிவு வெளியாகும் தேதியை தேசிய தேர்வுமுகமை அறிவித்துள்ளது.

இதன்படி நீட் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

நீட் முடிவு தாமதம் எதிரொலியாக தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது நீட் தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 9 அல்லது 10ம் தேதி தொடங்கலாம் என கூறப்படுகிறது.  

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)