ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப்பெற வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

 2014 -ஆம் ஆண்டில் மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பை காலி செய்யுமாறு உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார்.

யார் யார் அனுமதியை மீறி குடியிருக்கிறர்கள் என்பதை கண்டறிய் டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அறிவுறுத்திய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம் எனக் கூறினார்.

மேலும், படித்தொகையை பெற்றுக்கொண்டு வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம் என்றும் ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது அது அழிவுக்கு கொண்டு செல்லும் என அறிவுறுத்தினார். அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறுதான் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் அது குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும் எனவும் தெரிவித்தார்.

ஊரில் உள்ள கருப்பு ஸ்டிக்கரை அகற்றும் நடவடிக்கை எடுத்துவிட்டு, காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று சொல்வது என வினவிய நீதிபதி, ஓய்வுபெற்ற காவல்துறையினர், நீதிபதிகள் வீடுகளில் உள்ள காவலர்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு அளித்த விளக்கம் திருப்தி அளிப்பதாகவும் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்