அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - வைரலாகும் வீடியோ

 


தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். விபத்து மற்றும் அவசர சிகிச்சை, மகப்பேறு என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மக்களில் பெரும்பாலானோர் தினக் கூலி தொழிலாளர்களாக உள்ளதால் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். அப்படி வரும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மகப்பேறு பிரிவு, ஸ்கேன், உடற்கூராற்வு உள்ளிட்ட பிரிவுகளில் அதிகம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களின் இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பெற உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் பெற்றனர்.

அந்த வடு மறைவதற்குள், அரசு மருத்துவமனை உடற்கூராய்வு பிரிவில் உடலை வாங்க வந்த உறவினரிடம் காடா துணிகளை வெளியில் இருந்து வாங்கி வருமாறு பிரேத பரிசோதனை கூட ஊழியர்கள். கூறுவது போல் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இதுதொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்அமுதவல்லி மற்றும்விண்ட்சர் பூங்காமருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பிரேத்பரிசோதனை கூடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் காமராஜ் (வயது 59). தமிழரசு (42) ஆகிய 2 பேர பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்