உயர் அதிகாரிகளின் டார்ச்சரே காரணம்' -வீடியோ வெளியிட்ட சிறப்பு எஸ்.ஐ


 நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் நீலகண்டன் நேற்று காவல்நிலைய வளாகத்திலேயே பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை அறிந்த சக காவலர்கள் அவரை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு நீலகண்டன் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.


அதில் தன்னுடைய மரணத்திற்கு பரமத்தி வேலூர் உட்கோட்ட டிஎஸ்பி ராஜா ரணவீரன், ஜேடர்பாளையம் எஸ்.ஐ. சுப்பிரமணியம், தனிப்பிரிவு சிறப்பு ஆய்வாளர் லட்சுமணன் ஆகிய மூவருமே காரணமென வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் நிலையில் அவரது மனைவி தேவியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கணவர் தற்கொலை முயற்சிக்கு குடும்ப பிரச்னை காரணம் அல்ல என்றும், காவல்துறை அதிகாரிகளின் டார்ச்சரே, அவரது தற்கொலை முயற்சி காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி ராஜா ரணவீரனிடம் கேட்டபோது கடந்த 30 நாட்களாக விடுமுறையில் இருந்த நீலகண்டன் சில தினங்களுக்கு முன்பு பணிக்கு வந்த நிலையில் ஒழுங்காக பணியாற்ற வேண்டும் என்றே அறிவுறுத்தியதாகவும், அவரிடம் வேறு எதுவும் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்