காவேரிப்பட்டினம் பள்ளி மாணவர்கள் உருட்டுக் கட்டையுடன் மோதல்

 


தமிழ்நாட்டில், பள்ளி மாணவர்கள் இடையே நடக்கும் மோதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலூர், திருவண்ணாமலை, மதுரை, தருமபுரிதிருநெல்வேலி உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் பல்வேறு பிரச்சனைகளுக்காக பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாற்றுச்சான்றிதழில் ஒழுங்கீனமற்ற மாணவர் அல்லது மாணவி என்று குறிப்பிடப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பின்னர், பள்ளி மாணவர்களிடையேயான மோதல் சம்பவங்கள் சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பள்ளி மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த சம்பவத்தின் வடு ஆறுவதற்குள், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 அடி நீள உருட்டுக் கட்டைகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பாலக்கோடு சாலையில் சந்தை பகுதியில் நடந்த இந்த மோதல் காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மாணவர்கள் மோதலுக்கான காரண குறித்து இதுவரை தெரியவில்லை. ஆனாலும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் இந்த சூழலில் மாணவர்களின் இந்த மோதல் சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)