வீடுகள் இடிப்பை எதிர்த்த போராட்டத்தில் மேதா பட்கர்!

 


சென்னை ஆர்.ஏ. புரத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இறந்த கண்ணைய்யா இறப்புக்கு காரணமான, ராஜீவ் ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்க மாநில சமூக ஆர்வலர் மேதா பட்கர் கலந்துகொண்டு, ஏழை மக்களின் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, "மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில், கால்வாய் ஓரம் இருப்பதாக கூறி சுமார் 200-க்கும் அதிகமான வீடுகளை தமிழக பொதுப்பணித்துறை தற்போது இடித்து வருகிறது.

அப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தினர் வசித்து வந்த வீடுகள், ராஜீவ் ராய் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், இந்த வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணையா என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். தீக்குளித்து உயிரிழந்த கண்ணைய்யாவின் உயிரிழப்புக்கு காரணமான ராஜீவ் ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரினார்.


மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தீக்குளித்து உயிரிழந்த நபருக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்றார் அவர். சுமார் 300 சதுர அடியில் 7 லட்சம் மதிப்பில் வீடு கட்டிதர வேண்டும் என்றும் குறிப்பிட்ட மேதா பட்கர், வீடுகளை இடிக்கும் போது மக்களின் ஒத்துழைப்புடன் மாற்று வீடு கட்டிதர வேண்டும் என்றும் கூறினார். வீடு இடித்ததன் மூலம் அங்கு இருக்கும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்த மேதா பட்கர், அங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது என்று கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்