இளைஞர் வீட்டு முன்பு பணத்தை இழந்தவர்கள் போராட்டம்-ரயில்வேயில் போலியான நியமன உத்தரவு..

 


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் இராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் வள்ளிநாயகம். இவர் ரயில்வேயில் பணியில் இல்லாமலேயே உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகக் கூறி அப்பகுதி மக்களை நம்ப வைத்துள்ளார்.

அவரது தோழியான அதே பகுதியை சேர்ந்த தமிழரசி என்பவர்க்கு திருச்சி பொன்மலையில் வேலை வாங்கி தந்ததாக அவரிடம் விசாரித்த அனைவரிடமும் கூறியுள்ளார். இதை  நம்பிய பலரும் அவரின் பேச்சை நம்பி ஒரே கிராமத்தே சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் ரூ.3 கோடிக்கு மேல் பணத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்களுக்கு இரயில்வேயில் போலியாக பணி ஆணையை வழங்கி 45 நாட்களுக்குப் பிறகு ட்ரெயினிங் அழைப்பார்கள் என்றும் 90 நாட்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் வள்ளிநாயகம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர்களுக்கு ரயில்வே துறை என போலியான இணையதள முகவரி தயார் செய்து பின்னர் அந்த இணையதள முகவரியின் மூலம் வேலைக்காக பணம் கொடுத்து அவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பணி நிமித்தமாக போலியாக மீட்டிங் நடத்தியுள்ளனர். தொடர்ந்து போலியான அரசாணையும் வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அது போலியான அரசாணை என்பதை அறிந்த பின் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ,  வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த டிசம்பர் மாதம் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து வள்ளிநாயகம், தமிழரசி, மகேந்திரகுமார், முருகன், ஆகிய 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.  4 பேரும் 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியான நிலையில் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் வள்ளிநாயகத்தின் வீட்டின் முன்பு நின்று மோசடியாக வாங்கிய பணத்தை தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருமண ஆகாத வள்ளிநாயகம் மற்றும் தமிழரசி ஆகிய இருவரும் கோவையில் தனியறையில் ஒன்றாக இருந்து கொண்டு எங்களிடம் பணத்தை சீட்டிங் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக போலியான பணி நியமன ஆணை  கொடுத்து ரூ. 3கோடி வரை ஏமாற்றப்பட்டிருப்பது இந்த போராட்டத்தின் மூலம் தெரிய வந்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரயில்வே துறையை அவமானப்படுத்தும் வகையில் போலி ஆவணம் மூலம் பணி ஆனை வழங்கிய மற்றும் உடந்தையாக இருந்த 4 பேர் மீது ரயில்வே துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)