காட்டிக்கொடுத்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்-விஸ்வரூபம் எடுக்கும் விக்னேஷ் கொலை வழக்கு...


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான போலீஸாருக்கு இன்னமும் ஜாமீன்கூட கிடைக்கவில்லை. அதற்குள்ளாக, சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் என்ற கைதி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு போலீஸார். கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மெரினாவில் குதிரை ஓட்டும் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரையும், அவரின் உறவினரான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷையும் 18.4.2022-ம் தேதி இரவு, சந்தேகத்தின்பேரில் போலீஸார் பிடித்தனர். தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களில், விக்னேஷ் 19-ம் தேதி வலிப்புநோய் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், விக்னேஷை அடித்தே கொன்றுவிட்டதாகவும், அதை மூடிமறைக்க போலீஸார் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் அவரின் அண்ணன் வினோத் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தையே பரபரப்பாக்கிய இந்த வழக்கை, "சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்த, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்துவருவதாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்படும் என்றும் உறுதியளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதையடுத்து விக்னேஷ் மரணத்தில் தொடர்புடைய

தலைமைச் செயலக காலனி போலீஸார் மீது கொலை மற்றும்

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ்

வழக்கு பதிந்தனர்.விஸ்வரூபம் எடுக்கும் விக்னேஷ் கொலை வழக்கு

சி.பி.சி.ஐ.டி போலீஸார். விசாரணைக்குப் பிறகு, சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமைக் காவலர் முனாப்,காவலர் பவுன்ராஜ்,ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன்ராம், சந்திரகுமார், ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகியோரை 7.5.2022-ம் தேதி கைதுசெய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விக்னேஷ் மரணம் தொடர்பாக நீதிபதியிடம் அவரின் அண்ணன் வினோத் இரண்டரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். நீதிமன்ற வளாகத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

"எனக்கு நான்கு தம்பிகள். இரண் டாவது தம்பிதான் விக்னேஷ். அப்பா வடிவேல் ஆட்டோ டிரைவர். அம்மாவுக்கு மனநலம் சரியில்லாததால் அவர் எங்களைப் பிரிந்து சென்று விட்டார். அப்பாவும் இறந்துவிட்டதால் சென்னை மெரினா கடற்கரையில்தான் நாங்கள் வளர்ந்தோம். கடலும், கடற்கரைக்கு வருபவர்களும்தான் எங்கள் வாழ்வாதாரம்.

குதிரைக் காலில் ஏதாவது குத்திவிட்டால் அதை எடுப்பதற்காக விக்னேஷ், சிறிய கத்தி ஒன்றையும், சிறு கம்பியையும் வைத்திருப்பான். அந்தக் கத்தியைக் காட்டி மிரட்டி அவன் தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸார் சொல்கிறார்கள். அது பொய். விசாரணையின்போது போலீஸாரை எதிர்த்து பேசியதுதான் விக்னேஷ் செய்த ஒரே தவறு. 

தற்போது வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சியில், விக்னேஷை போலீஸார் அடித்து இழுத்துச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. வெளியிலேயே இப்படி அடித்தால், காவல் நிலையத்துக்குள் வைத்து எப்படியெல்லாம் அடித்திருப்பார்கள்... அவன் ஏழை, கேட்க நாதியில்லை என்பதால் அவனை அடித்தே கொன்றுவிட்டார்கள். 

அவன் இறந்த தகவலை பட்டினப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து என்னிடம் சொன்னார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில், விக்னேஷ் முகத்தைப் பார்த்தபோதுதான் அவனுடைய உடம்பு முழுவதும் ரத்தக் காயங்கள் இருந்ததைக் கண்டேன். போலீஸார் சொல்வதைப்போல வலிப்பு வந்து இறந்திருந்தால், எப்படிக் காயங்கள் ஏற்படும்... ஈகோ பிரச்னை காரணமாக விக்னேஷை இரவு முழுவதும் போலீஸார் அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். கொலையை மறைக்க எனக்கு

ஒரு லட்சம் ரூபாயை போலீஸார் கொடுத்தனர். அதற்கு ஒப்புக்கொள்ளாததால், என்னுடைய மூன்றாவது தம்பிமீது வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டினர்" என்றார் கண்ணீர்மல்க.

“இந்த வழக்கில் சிலரைத் தப்பவைக்க போலீஸார் முயல்கிறார்கள். விக்னேஷ் கொலை செய்யப்பட்டதை மறைக்க பட்டினப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, ஆயிரம் விளக்கு இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், மெரினா இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் வினோத்தையும், அவரின் குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டிவருகிறார்கள். நீதி கிடைக்கும் வரை போராடுவோம்" என்கிறார் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம்.

வினோத் ஆசீர்வாதம் சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “இந்த வழக்கில் முதற்கட்டமாக 6 காவலர்களைக் கைதுசெய்துள்ளோம். தேவையான சிசிடிவி பதிவுகள் கிடைத்துள்ளன. 

மேலும் காவலர் ஆனந்தி என்பவர், விக்னேஷ் மரணம் குறித்து முக்கியத் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். முதற்கட்ட விசாரணையில் இரவு முழுவதும் விக்னேஷை போலீஸார் லத்தியால் அடித்ததும், சித்ரவதை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களின் வெறியாட்டத்தை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் புட்டுப் புட்டு வைத்துவிட்டது. கால் எலும்பை அடித்தே உடைத்திருக்கிறார்கள்.

 பின்னந்தலை, முகம் உட்பட 13 இடங்களில் காயம் இருந்தது. உடைந்த லத்திகளையும் பறிமுதல் செய்துள்ளோம். விக்னேஷுடன் கைது செய்யப்பட்ட சுரேஷ் சிறையில் உள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தவுள்ளோம். இந்த வழக்கில் மேலும் இரண்டு காவலர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் விரைவில் கைதுசெய்வோம். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் சில தகவல்களை வெளிப்படையாகப் பேச முடியாது" என்றார் சுருக்கமாக.

தலைநகரிலேயே இவ்வளவு வெறியாட்டமென்றால், கிராமப்புற, மலைவாழ் மக்களை இந்தக் காவல்துறை கறுப்பு ஆடுகள் எப்படிக் கையாள்வார்கள்?!

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!