பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை


 1991, மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்

1991, ஜூன் 11ம் தேதி பேரறிவாளன் கைது

1998, ஜனவரி 28ம் தேதி நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்

தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 1999, மே 11ம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் 1999 அக்டோபர் மாதம் தள்ளுபடி

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் கருணை மனுக்களை 1999ம் ஆண்டு தள்ளுபடி செய்தார் ஆளுநர் பாத்திமா பீவி

ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது

2000ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது

தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்

2000ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அப்போதைய குடியரசுத்தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர்; 2011ம் ஆண்டு இவர்களின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில்

11 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது; பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது

2014 பிப்ரவரி 18ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது

தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி எழுவரும் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்; தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகி மத்திய அரசு தடையாணை பெற்றது

இந்த வழக்கு மத்திய – மாநில அரசுகளின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது; இதனையடுத்து இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, எழுவரையும் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையென அறிவித்தது

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூவர் அமர்வு 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பளித்தது

இதன்தொடர்ச்சியாக 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது

2022, மார்ச் 9ம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது

2022, மார்ச் 18ம் தேதி பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)