திமுக கவுன்சிலருக்கு நீதிபதி கேள்வி! யாருக்காக 12 மணி வரைக்கும் கோவிலை திறந்து வைத்திருந்தார் அர்ச்சகர்?

 


நைட்டியுடன் வந்ததால் திமுக கவுன்சிலரை கோவிலுக்கு விடாமல் தடுத்ததால் அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   அவர் மீது பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருக்கிறது.   இது தொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அது குறித்து பதில் அளிக்கும்படி நைட்டியுடன் கோவிலுக்கு சென்ற கவுன்சிலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டையில் உள்ளது சீதாராமச்சந்திரன் கோவில்.  இக் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் கண்ணன்.   சேலம் மாநகராட்சியின் 40 வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா.  இவர் நைட்டியுடன் சீதாராமச்சந்திரன் கோவிலுக்கு சென்று இருக்கிறார் .  

அப்போது அர்ச்சகர் கண்ணன் ,  கோவிலுக்குள் நைட்டி அணிந்து வரக்கூடாது.   முறையான உரை அணிந்து வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.   இதனால் கவுன்சிலர் கவுன்சிலருடன் வந்த ஆதரவாளர்கள் அர்ச்சகரை தாக்க முயற்சித்திருக்கிறார்கள்.

தன்னை கோவிலுக்கு விடாமல் அர்ச்சகர் தடுத்ததால்,   ஆகம விதிகளுக்கு முரணாக இரவு 12 மணி வரை கோயிலை திறந்து வைத்திருந்ததாகவும்,  பெண்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றும் அர்ச்சகர் கண்ணனுக்கு எதிராக குற்றம் சாட்டி,  அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரியும்,  தன் மீதான குற்றபத்திரிகையை ரத்து செய்யவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் அர்ச்சகர் கண்ணன். அந்த மனுவில்,   தனக்கு எதிராக கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எப்போது நடந்தன என்பதற்கான விவரங்கள் எதிர் தரப்பினர் கூறவில்லை.  

யாருக்காக நான் இரவு 12 மணி வரைக்கும் கோவிலில் திறந்து வைத்திருந்தேன் என்ற விவரங்களையும் அவர்கள் சொல்லவில்லை.  இதனால் எனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் சஸ்பெண்ட்  உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அர்ச்சகர் கண்ணனின் மனுவை நீதிபதி ஜி. ஆ.ர் சுவாமிநாதன் விசாரித்து,   இந்த மனு தொடர்பாக வரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர்,  திமுக கவுன்சிலர் மஞ்சுளா உள்ளிட்டவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்