“இஸ்லாமிய பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வேன்” - யோகி ஆட்சியில் பகிரங்க மிரட்டல் விடுத்த சாமியார் !


 உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மசூதி அருகே ஏப்ரல் 2ம் தேதி ஜீப் காரில் வந்த சாமியார் ஒருவர் பொதுமக்களிடம், வாகனத்தில் அமர்ந்த படியே உரையாற்றினார்.

அப்போது அந்த சாமியார், “இப்பகுதியில் உள்ள இந்து பெண்களுக்கு இஸ்லாமியர்கள் தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வேன்" என பகிரங்க மிரட்டல் விடுத்தார். இவரின் அந்தப் பேச்சைக் கேட்ட அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி காவல்நிலையத்தில் பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் என்பவர் காவல்நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலிஸார் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் சாமியார் பேசிய வீடியோவை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து 6 நாள் கழித்து சாமியார் மீது நடவடிக்கை எடுப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் போலிஸாரின் இந்த அலட்சிய நடவடிக்கைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இதுபோன்ற சம்பவங்களில் போலிஸார் வாய்மூடி இருக்கக்கூடாது. பெண்களுக்கு எதிராக பேசிய சாமியார் உடனே கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்