தமிழக வக்ப் வாரிய தலைமை வழக்கறிஞராக ஹாஜா மெய்தீன் கிஸ்தி நியமனம்.

 தமிழக அரசின் வளமையான வாரியம் தமிழக வக்ப் வாரியம் ஆகும். பல்லாயிரக்கோடி மதிப்பிலான இஸ்லாமிய சொத்துக்களை நிர்வாகிக்கும் பொறுப்பு தமிழக வக்ப் வாரியத்திற்க்கு உண்டு. தமிழக வக்ப் வாரியத்தை நிர்வாகிக்க சேர்மன், உறுப்பினர்கள் என முழு அமைப்பு இருந்தாலும் வக்ப் வாரியம் சம்பந்தமான பல சட்ட பிரச்சினைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குறிப்பாக வக்ப் வாரிய சொத்துக்கள் அபகரிப்பை தடுக்க தனி வழக்கறிஞர் பிரிவே தேவை. இத்தகைய வக்ப் வாரியத்திற்க்கு இந்திய சட்ட அறிவும் இஸ்லாமிய சட்ட அறிவும் நிறைந்த நபரே தலைமை வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பது பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையாக இருந்தது. 

இந்திலையில் கடந்த 27-04-2022 அன்று தமிழக வக்ப் வாரியம் வக்ப் வாரிய வழக்கறிஞர் பட்டியலை திருத்தி அமைத்தது. அதன் படி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹாஜா மெய்தீன் கிஸ்தி தமிழக வக்ப் வாரிய தலைமை வழக்கிறஞராக நியமிக்கப்பட்டார். தமிழக அரசின் தமிழக வக்ப் வாரிய அனைத்து வழக்குகளும் அன்னாரின் நேரடி கட்டுபாட்டுக்கள் கொண்டுவரப்பட்டது. 

யார் இந்த ஹாஜா மெய்தீன் கிஸ்தி. 

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி கிராமத்தில் இஸ்லாமிய மார்க்க பற்றாளராக சிறந்து விளங்கிய திரு ஷாகுல் ஹமீது , அல்லீமா தம்பதியருக்கு மகனாய் 10-06-1966 அன்று பிறந்தவராவர். திருநெல்வேலியில் உயர்நிலை படிப்பு செயின்ட் ஜான் பள்ளியிலும் மேல்நிலை படிப்பு கத்தீட்ரல் பள்ளியிலும், பின்னர் தமிழக அரசு சட்டகல்லூரியில் சட்டம் பயின்றார். 1988ல் முதன்மை மாணவராக சட்ட படிப்பு பட்டயம் பெற்றார். அன்றைய கால கட்டத்தில் மூத்த வழக்கறிஞர் சின்னச்சாமி அவர்களிடம் உதவி வழக்கறிஞராக சேர்ந்து சட்டத்துறையின் அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்கினார். 

ஹாஜா மெய்தீன் கிஸ்தி அவர்களுக்கு ஜனாபா ஹலீமா என்ற மனைவியும் ஜனாபா ருக்சனா என்ற மகளும் இருக்கின்றனர். இவரது மகள் ருக்‌ஷானா ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல மருத்துவர் என்பது குறிப்பிடதக்கது.  

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருக்கும்  ஹாஜா மெய்தீன் கிஸ்தி அவர்கள் சட்டத்துறையில் சுமார் 35 ஆண்டு கால அனுபவம் உள்ளவராவர், மேலும் தமிழக அரசின் சுங்க வரி (CUSTOMS) வழக்கறிஞராகவும், தமிழக அரசு ஹஜ் கமிட்டி வழக்கறிஞராகவும் , தமிழக வக்ப் வாரியம் வழக்கறிஞராகவும், சென்னை PORT TRUST OF INDIA வழக்கறிஞராகவும். DENTAL COUNSEL OF INDIA வழக்கறிஞராகவும், Tariff Authority of  Major Port in India அமைப்பின் வழக்கறிஞராகவும், IDPLன் வழக்கறிஞராகவும், தமிழ்நாடு பார் கவுன்சிலின் வழக்கறிஞராகவும் மற்றும் பிற அரசுத்துறை வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். மேலும்  சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிராக யாரெனும் வழக்கு தொடர்ந்தால் நீதிமன்ற பதிவாளர்  சார்பாக ஆஜாராகி வாதிடும் வழக்கறிஞர் ஆவர்.

இஸ்லாமிய வழக்கறிஞர்களின் சிறந்த வழக்கறிஞரான ஹாஜா மெய்தீன் கிஸ்தி தமிழக அரசின் வக்ப் வாரிய தலைமை வழக்கறிஞராக நியமித்து இருப்பது பரவலாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இது சம்பந்தமாக இ்ஸ்லாமிய பத்திரிகையாளர் நலப்பேரவை தலைவர் டாக்டர் தமீமுல் அன்சாரி கூறுகையில், ஹாஜா மெய்தீன் கிஸ்தி தமிழக அரசின் வக்ப் வாரிய தலைமை வழக்கறிஞராக நியமித்து இருப்பது  மிகவும் வரவேற்க்க தக்க செயல், தமிழக அரசின் நாயகன் மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணைப்படி  சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மற்றும்  தமிழக வக்ப் வாரிய தலைவர் அவர்களின் செயல்பாட்டின் சிறப்பாக இந்த நியமனம் அமைந்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ஹாஜா மெய்தீன் கிஸ்தி அவர்கள் மிகவும் நேர்மையான திறமையான நபர்.வக்ஃப் சொத்துக்களை நிச்சயமாக போராடி மீட்கும் திறமையுள்ளவர். தலைமை வழக்கறிஞாரக நியமனம் செய்யப்பட்டுருப்பதனால் வக்ஃப் வாரியம் அரசு பலம் பெறும். ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் இதனை வரவேற்கிறது என்றார். 

மேலும் இது சம்பந்தமாக தென்னிந்திய தர்காக்கள் பள்ளிவாசல்கள் அசொசியேசன் தலைவர் செய்யது முஹம்மது கூறுகையில், ஹாஜா மெய்தீன் கிஸ்தி தமிழக அரசின் வக்ப் வாரிய தலைமை வழக்கறிஞராக நியமித்து இருப்பது மிகவும் நல்ல செயல்,  சிறந்த நபருக்கு உரிய அங்கீகாரம் அளித்த தமிழக வக்ப் வாரிய நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார். 

தமிழக வக்ப் சொத்து மீட்போர் சங்கம், வக்ப் மீட்பு குழு, தர்காக்கள் நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தமிழக முதல்வர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றி கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்