நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா

 


பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் சரமாரியாக வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.அபராதம் விதித்த ஆத்திரத்தில், நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் சரமாரியாக வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் திரேஷா. இவர் நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்இதில் உதவி ஆய்வாளருக்கு இடது கன்னம் இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நெல்லையில் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி பெண் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.


இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷா வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஆறுமுகம் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்துள்ளார்.

அந்த பகையை மனதில் வைத்து கொண்டு நேற்று பணியில் இருந்தபோது கையில் இருந்த சின்ன கத்தியால் மார்க்ரெட் திரேஷாவை ஆறுமுகம் குத்தியுள்ளார். இதையடுத்து ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லையில் சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பாதுகாப்பு பணியின் போது தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!!

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!